Tuesday 20 August 2019


சங்கம்ம 2001- அரசு மேல்நிலைப்பள்ளி, ஜல்லிப்பட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
அரசு மேல்நிலைப்பள்ளி ஜல்லிப்பட்டியில் 2000-2001 ம் கல்வியாண்டில் 10 ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்வு ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 18.8.2019 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி ஜல்லிப்பட்டியில் 2018-2019 ம் கல்வியாண்டில் பயின்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அன்றைய காலகட்த்தில் பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர்  மணிமேகலை அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் பெருமக்கள்  மனோன்மணி, சுபிதாபாய், ராணி , சின்னராசு, ஆறுமுகம், ராமலிங்கம், மனோகரன், சபரீஸ்வரி ஆகியோர் மாணாக்கர்களின் வளர்ச்சி பற்றியும், ஒவ்வொருவரின் திறமைகள் பற்றியும் வாழ்த்துரை வழங்கினர்.
அதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மரம் நடும் விழா:
பள்ளி வளாகத்தில் முன்னாள் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் அனைவரும் இணைந்து மரக்கன்று நட்டனர். இயற்கையை பாதுகாப்போம் என்று மாணாக்கர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதை தொடர்ந்து முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் சார்பில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.   ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் சந்திப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்து.
2.   அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணாக்கர்களுக்கு ரொக்கப்பரிசு,சான்றிதழ் வழங்குவது என தீர்மானிக்கப்பட்து.
3.   கிராமப்புற மாணாக்கர்களுக்கு படிக்க வசதியில்லாத மாணாக்கர்களை படிக்க வைக்க உதவுதல்.
4.   பள்ளி வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவை தீர்மானிக்கப்பட்து.
அரசுப்பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் கல்வியிலும், அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அனைவரும் ஒரு சேர முடிவெடுத்தனர்.இது போன்ற நிகழ்வுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வேண்டும் என்று ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணாக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இறுதியாக குழு புகைப்பத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 






Group 4 model test


கலிலியோ அறிவியல் கழகம் (VP-TN0014)
சத்யம் கோச்சிங் சென்டர்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் , சத்யம் கோச்சிங் சென்டர் மற்றும் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கழகம் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான மாதிரித்தேர்வு வரும் 18-08-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வானது வரும் 2019 செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறுகிறது. அது சமயம் கிராமப்புற மாணாக்கர்களும் பங்கேற்று அரசுப்பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக இந்த மாதிரித்தேர்வு நடத்தப்படுகிறது.
மாதிரித்தேர்வானது 18-08-2019 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.தேர்வில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் கிடையாது.
மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும். மாதிரித்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். 8883535380, 9976944101.