கலிலியோ அறிவியல் கழகம் (VP-TN0014)
சத்யம் கோச்சிங் சென்டர்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் , சத்யம் கோச்சிங் சென்டர் மற்றும் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கழகம் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான மாதிரித்தேர்வு வரும் 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வானது வரும் 2019 செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறுகிறது. அது சமயம் கிராமப்புற மாணாக்கர்களும் பங்கேற்று அரசுப்பணிகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் விதமாக இந்த மாதிரித்தேர்வு நடத்தப்படுகிறது.
மாதிரித்தேர்வானது 18-08-2019 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.தேர்வில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் கிடையாது.
மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும். மாதிரித்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். 8883535380, 9976944101.
No comments:
Post a Comment